கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை! அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகும் போராட்டக்காரர்கள்
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அடுத்தக் கட்ட நகர்வு தொடர்பில் கலந்தாய்வு
கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை விட இந்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகாத நிலையில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் மத்தியில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, தான் பதவி விலகுவதாக அறிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்த நிலையில் இதுவரை தனது பதவி விலகல் கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.