சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் ஜனாதிபதி - பிரதமருக்கு திறந்த கடிதம்

Sri Lankan Tamils Sri Lanka
By Rusath Nov 12, 2024 08:43 AM GMT
Report
Courtesy: Rukshy

135 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், 18 சிவில் அமைப்புக்களும், இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் திறந்தை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசு முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை கௌரவிக்கவும் பாதுகாக்கவும் பொறுப்புடையது.

நீங்கள் செயலற்றவர்களாக இருக்கப் போகின்றீர்களா? அண்மையில் வெளிவந்த காணொளி ஒன்றில், அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் அவர்கள், 1951ம் ஆண்டு 13ம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்தத் தேவையுமில்லை என்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தச் சட்டம் தொடர்பாக கூறப்படும் கருத்துக்களை கருத்துக்களாக மாத்திரம் பார்ப்பதாகவும், கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். கருத்தாழமற்ற இவருடைய பேச்சினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், அச்சட்டத்தை திருத்தத்திற்கு உள்ளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்க கருத்து

காரணம் வகைப் பொறுப்புக் கூற வேண்டிய ஓர் அரசாங்கத்திடமிருந்து இவ்வாறான கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியலமைப்பு உறுப்புரை 12 உப பிரிவு 1 இலங்கை மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சரி சமமானவர்கள் என்று கூறுகின்றது. அத்துடன் இவ்வடிப்படை உரிமையானது எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் ஜனாதிபதி - பிரதமருக்கு திறந்த கடிதம் | President An Open Letter To The Prime Minister

இந்த நிலையில் அரசாங்கம் என்ற வகையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை நீதமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் படி அரசின் பொறுப்பாகும். இந்த அரசியலமைப்பினூடனான அடிப்படை மனித உரிமை அறிவுறுத்தலானது அரசு ஏற்றுக் கொள்ளாமல் பொறுப்பை அரசாங்கம் மதத் தலைவர்கள் மீது சாட்டுவது அரசு தன் கடமையில் இருந்து விலகுவதாக நாங்கள் கருதுகின்றோம்.

தேசிய மக்கள் சக்தி அரசு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் உள்ள பாரபட்சங்களை சரிகாணும் நிலைப்பாட்டில் இருக்குமாயின் தற்போது அமுலில் இருக்கும் இந்த பாராபட்சமான சட்டத்தின் குறைபாடுகளால் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன முறைமைகளைக் கையாளப் போகின்றது?

மேற்குறித்த அரசியலமைப்பு கோட்பாடுகளின் பிரகாரம், சமூகத்தில் உள்ள இளவயது திருமணங்களையும், பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களையும் தடுத்து குடும்ப வாழ்வுகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

மேலும், ஒரு வரைமுறை இல்லாத பலதாரமணக் கோட்பாட்டில் சிக்கித் தவிக்கும் மனைவிகளையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது? மேலும் ஆணாதிக்க கட்டமைப்பை மாத்திரம் முன்நிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது பெண்களை எந்த வகையிலும் உள்வாங்க முடியாத அளவு பாராபட்சத்தை வெளிபடுத்திக் கொண்டிருக்கின்றது.

மனித உரிமை 

குறிப்பாக காதிகள் முறைமை பெரும்பாலானவை ஊழல் நிறைந்ததாகவும் பாராபட்சம் மிகுந்ததாகவும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது மேற்குறிப்பிட்ட இலங்கையின் 1978ம் ஆண்டுக்கான யாப்பின் அடிப்படை மனித உரிமை வலியுறுத்தல்களை முற்று முழுதாக மீறுகின்றது.

எனவே இதனை இவ் அரசாங்கம் எவ்வாறு நிவர்த்தி செய்யப் போகின்றது? மேலும் காதி முறைமையானது முழுவதுமே அரசாங்கத்தின் பாதீடினூடாக வரி செலுத்துபவர்களின் வரிப்பணத்தில் இருந்து அமுல்படுத்தப்படுகின்றது.

ஆகவே இதனைக் கேள்விக்குட்படுத்துவது அரசாங்கத்தின் கடமையுடன் இந் நாட்டு மக்கள் எல்லோரதும் பொறுப்புமாகும். ஆகவே முழுமையாக அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டிய விடயத்தை பொடுபோக்காக "இது சமூகத்தின் கருத்துச் சுதந்திரம்" என்று தட்டிக் கழிப்பது பொறுப்புக் கூறும் ஒரு அரசாங்கத்திற்கு முறையாகுமா?

ஆகவே அமைச்சுப் பேச்சாளர் விஜித ஹேரத் அவர்கள் பொறுப்பற்ற வகையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் தேசிய மக்கள் சக்தி நிலைப்பாடு என்ன?

அதாவது தேர்தல் விஞ்ஞாபனத்தில் " பெண்களுக்கு மற்றும் சிறுவர்களுக்கு பாகுபாடு காட்டுகின்ற மேலும் அழுத்தங்களுக்கு ஆளாக்குகின்ற சட்டங்களைத் திருத்துதல்", என்று கூறியிருக்க ஏன் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவைப் பேச்சாளர் அவர்கள் இவ்வாறான கருத்தை ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்?

தேசிய மக்கள் சக்தி கட்சியானது முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறான மாயையான போக்கைக் கடைப்பிடிக்கின்றதா? கட்டாயம் தேசிய மக்கள் சக்தி கட்சியானது பாரிய அளவு பாதிப்புக்கள்ளாக்கப்பட்டுள்ள மற்றும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெண்களினது வாக்குகளைப் பெற வேண்டுமாயின் பெண்களாகிய எங்களுக்குத் தெரிய வேண்டும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட திருத்தம் சார்ந்து தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன என்பதைத் தேர்தலுக்கு முன்பதாகத் தெரிவிக்க வேண்டும்.

40 வருட ஆட்சி

அப்படி இல்லாமல் நழுவிப் போவீர்களேயானால் முஸ்லிம் பெண்களுக்கு வகைப் பொறுப்புக் கூற முடியாத ஓர் ஆட்சியாகவேதான் உங்களது ஆட்சியும் அமையும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்ததற்கு காரணம் ஏனெனில் தேசிய மக்கள் சக்தி கட்சியானது பாராபட்சமான கட்டமைப்புக்களை மறுசீரமைத்து எல்லோருக்கும் மாற்றத்தை உருவாக்கும் ஒரு கட்சியாக தங்களை பிரதிபலித்தமையால்.

கடந்த 40 வருடங்களாக ஆட்சியில் இருந்த எல்லாக் அரசியல்க் கட்சிகளும் இந்தச் சட்டத்தை ஆண்களுடன் மாத்திரம் கலந்துரையாடி எந்த திருத்ததிற்கும் உட்படுத்தாமல் இருந்ததே.

இதே போல் தேசிய மக்கள் சக்தி கட்சியும் முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கட்டமைப்பு ரீதியாக இருக்கின்ற பாராபட்சங்களை முடிவுக்குக் கொண்டுவராமல் முஸ்லிம்களினது வாக்குகளிற்காக மாத்திரம் ஏனைய ஆட்சியாளர்கள் சென்ற வழியிலேயே கொண்டு செல்லப் போகின்றதா?

அப்படி நடக்குமாக இருந்தால் முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் ஒரு விடிவு காலத்தைக் கொடுக்காத ஒரு ஆட்சி முறையைத்தான் நீங்கள் வைத்துள்ளீர்கள் என்பது நிரூபணமாகின்றது.

அப்படி இல்லை என்றால் வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் திருத்தம் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி

27 Dec, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, காரைநகர், கொழும்பு, திருகோணமலை

09 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, விசுவமடு

22 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி கிழக்கு, அச்சுவேலி

26 Dec, 2019
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, Scarborough, Canada

19 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

25 Dec, 2014
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சுவிஸ், Switzerland

25 Dec, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Raynes Park, London, United Kingdom

26 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Wimbledon, United Kingdom, Thames Ditton, United Kingdom, Croydon, United Kingdom

09 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Scarborough, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, நுணாவில், உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

20 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பேர்லின், Germany, London, United Kingdom

24 Dec, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Woodbridge, Canada

23 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, அரசடி

18 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், Scarborough, Canada

23 Dec, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Ittigen, Switzerland

26 Dec, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நல்லூர், வெள்ளவத்தை, Fleet, United Kingdom

18 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, வைரவபுளியங்குளம்

22 Dec, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில், Kierspe, Germany

20 Dec, 2024
மரண அறிவித்தல்

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருக்கேதீஸ்வரம், வவுனியா

22 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் மேற்கு, யாழ்ப்பாணம்

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US