பாலர் பாடசாலை பிள்ளை போல் நீதி அமைச்சர் கருத்தினை வெளியிடுகிறார்: அருட்தந்தை மா.சக்திவேல்

Investigation Protest War Preschool
By Independent Writer Feb 18, 2022 10:28 AM GMT
Report

பாலர் பாடசாலை பிள்ளை போல் நீதி அமைச்சர் வெளியிடும் கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''நீதி அமைச்சர் அலி சப்ரி கடந்த ஞாயிறு (13) பத்திரிகை ஒன்றிற்கு வழங்கியிருந்த தனிப்பட்ட பேட்டியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் , யுத்தம் தொடர்பிலும் உண்மைகளை வெளிப்படுத்தி ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ள விடயத்தினை சர்வதேச சமூகம் ஏற்றுச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உட்படுத்த வேண்டும் என்பதோடு தமிழர்கள் மீது வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதோடு அவரின் கூற்றுத் தமிழர்களைத் தொடர் போராட்டத்திற்கே தள்ளியுள்ளது எனலாம்.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆட்சியாளர்களின் "நீதிக்கான அணுகுதல்" வேலைத்திட்டம் மூலம் சர்வதேசத்தின் கண்களில் மண்ணைத்தூவ எடுத்த முயற்சி தோல்வி கண்டுள்ளது.

இதுவரை காலமும் ஆட்சியாளர்கள் வடக்கில் "யுத்தம் நடைபெறவில்லை அங்கு நடந்தது மக்களை மீட்கும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கையே"எனக் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் நீதியமைச்சர் யுத்தம் நடைபெற்றது என்பதை உறுதியாக்கியுள்ளார்.

இராணுவத்தில் காணாமல் போனதை போன்று விடுதலைப்புலிகள் தரப்பிலும், தமிழர் தரப்பிலும் என பொதுமக்கள் காணாமலாக்கப்பட்டதையும் ஏற்றுக் கொள்கின்றார்.

ஆட்சியாளர்களால் முற்றாக அழிக்கப்பட்டதாகக் கூறும் விடுதலைப்புலிகளிடம் இனி விசாரணை நடத்த முடியாது. நீதி அமைச்சரின் ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் யுத்தத்தைத் தொடர்ந்து படை அதிகாரிகள் தற்போது உயர் பதவிகளில் உள்ளதோடு அரசியல் வாதிகளாகவும் உள்ளனர். அவர்களை உயர் நிலையிலிருந்து நீக்கி விசாரிக்க வேண்டும்.

ஆனால் சிங்கள மக்கள் இராணுவத்தைக் குற்றவாளிகள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதிலிருந்து உள்ளக விசாரணை என்பது ஏமாற்று நாடகம் என்பது தெளிவாகின்றது. இதனால் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை அவரின் கூற்று மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் "உங்கள் உதவிகளும், சலுகைகளும், மரண சான்றிதழ்களும் எங்கள் உயிரான உறவுகளின் உயிருக்கு ஈடாகுமா? அவர்களுக்கு என்ன நடந்தது? மரண சான்றிதழ் வழங்க முன்வரும் நீங்கள் அவர்கள் மரணம் அடைந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் மரணத்திற்கு அல்லது கொலைகளுக்கு யார் காரணம்? எனக் கேட்பதை நீதியமைச்சர் அரசியல் எனக்கூறி ஆட்சியாளர்களின் அரசியலை மறைக்க முயல்கின்றார்.

உங்கள் சுதந்திர காலத்திலிருந்து இன அழிப்பையும் அதனையே 30 வருட காலமாக யுத்தத்தமாகவும் நடாத்தியதும் காணாமலாக்கப்பட்டதும் பேரினவாத அரசியல் காரணமாகவே. தமிழ் தலைமைகளோடும், இயக்கங்களோடும் எத்தனையோ கட்ட பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் இவற்றையெல்லாம் கிழித்தெறிந்து இன அழிப்பைத் தொடர்ந்ததோடு ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் 13+ சர்வதேசத்தை ஏமாற்றியது யார்? இவற்றையெல்லாம் மறந்து பாலர் பாடசாலை பிள்ளை போல் நீதி அமைச்சர் வெளியிடும் கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

கல்விமான்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு வெளியேறியமைக்கு அடக்குமுறை இன அழிப்பு யுத்தமே காரணம். அவ்வாறு வெளியேறியோர் முன்வைக்கும் நீதிக்கான கோரிக்கையினை "கூப்பாடு ,கூச்சல்" என்றும் "கத்திக் கொண்டிருக்கின்றார்கள்" என்றும் அவமானப்படுத்தியுள்ளமை ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தியதாகவே கொள்ளல் வேண்டும்.

நீதி அமைச்சரின் செவ்வி தமிழர்களைப் பலமான போராட்டத்திற்குத் தள்ளியுள்ளது. இதனோடு நிதியமைச்சர் வட கொரியாவிலிருந்து யுத்தத்திற்கான ஆயுதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது என்னும் கூற்றையும் அடிப்படையாக வைத்து ஐநா மனித உரிமைப் பேரவை சர்வதேச சக்திகளின் அரசியலுக்குள் சிக்கி விடாது தொடர்ந்து இன அழிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்கச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு உட்படுத்தவும் , சுதந்திர வாழ்வை உறுதிப்படுத்தவும் அரசியல் தீர்வுக்கு வழி வகுக்க வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US