விசேட வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்க ஏற்பாடு: காணி அமைச்சு
மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் நேற்று (30.01.2024) இடம்பெற்ற தொழில்நுட்ப முறைமையினூடாக கலந்துரையாடலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த காணி அமைச்சின் செயலாளர்,
“உரித்து வேலைத்திட்டத்தின் முதற் கட்டமாக 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைப்பதற்கான தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி (05) ரங்கிரி தம்புளை விளையாட்டரங்களில் நடைபெறவுள்ளது.
காலணித்துவ ஆட்சி
இந்த திட்டத்தில் 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதோடு, அதற்காக வரவு செலவு திட்டத்திலும் 2 பில்லியன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணி உறுதிகள் அனைத்தும் முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களாக மாற்றப்பட உள்ளன.
எனினும், காலணித்துவ ஆட்சியில் வெளிநாட்டவர்கள் இலங்கையில் கையகப்படுத்திய காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக உள்நாட்டவர்களுக்கு அனுமதி பத்திரங்கள் ஊடாக வழங்கியிருந்தனர்.
காணிகளில் விவசாயம்
இருப்பினும் 1935ஆம் ஆண்டில் காணி கட்டளைச் சட்டத்தின் ஊடாக உள்நாட்டவர்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக மற்றுமொரு அனுமதி பத்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் கீழ் காணிகளில் விவசாயம் செய்வதற்கும் வீடுகளை நிர்மாணிப்பதற்குமான அனுமதிகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அந்தக் காணிகளை விற்பனை செய்தல் அல்லது வேறு தரப்பினருக்கு கைமாற்றுதற்கான உரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
