முடிவுக்கு வரும் பிரேமதாசவின் குடும்ப அரசியல்! மகாசங்கத்தினர் முன்னிலையில் சஜித் உறுதிமொழி
சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்தின் பின்னர் பிரேமதாச குடும்பத்தின் அரசியல் முடிவுக்கு வரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஜலனி பிரேமதாசவிற்கு "ஸ்ரீ சுகத சாசன பிரசாதனி" என்ற கௌரவ பட்டம் பெற்றுக்கொடுத்து, மகா சங்கத்தினர் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மனைவி மக்கள் சேவையை செய்கின்றார். ஆனால் அரசியலில் இணையமாட்டார் எனவும், இனிவரும் காலங்களில் பிரேமதாச குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப அரசியல்
குடும்ப அரசியலுக்கு தான் முற்றிலும் எதிரானவர் எனவும், ஆனால் அவர்களின் சமூக சேவை உரிமையில் தலையிட தாம் ஒருபோதும் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக சேவை ஆற்றுவது என்பது தேர்தலில் போட்டியிடுவதோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதோ அல்ல.சமூக சேவைக்கான ஒவ்வொருவரினது உரிமையையும் யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |