வெள்ளவத்தை நாணய மாற்று நிலையம் மீது மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை
கொழும்பில் பிரபல நாணய மாற்று நிறுவனமான பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்தினை இலங்கை மத்திய வங்கி தற்காலிக இடைநிறுத்தியுள்ளது.
கொழும்பு மற்றும் வெள்ளைவத்தை ஆகிய பகுதிகளில் செயற்படும் இந்த நிறுவனத்தின் ஊடாக நாணய மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டள்ளது.
2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் (சட்டம்) 11 (3) ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக இந்த இடைக்கால தடை மத்திய வங்கியினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கம்பனி மூலம் புரியப்பட்ட இணங்காமைகள் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொண்டதன் பின்னர், அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாக இரத்துச் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் ஊடாக வெளிநாட்டு நாணயங்களை வாங்குதல், விற்பனைசெய்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணானதாகக் கருதப்படும் எனவும் பொதுமக்களுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
