முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான 20 கோடி ரூபா பெறுமதியான காணிக்கு, போலியான ஆவணங்கள் தயாரித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ராஜாங்க அ மைச்சர் பிரசன்ன உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பிரசன்ன ரணவீரவுடன் ஏனைய மூன்று பேருக்கும் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி வரையில் இந்த நான்கு பேரினதும் விளக்க மறியலை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மஹர பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது.
நேற்று சந்தேகநபர்கள் நேரில் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகாத நிலையில், நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலமாக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்குடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட சிலருக்கு நிதிமன்றம் ஏற்கனவே பிணை வழங்கியிருந்தது.




