கிளிநொச்சியில் நனோ நீர் சுத்திகரிப்பு மையம் திறந்து வைப்பு
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகரபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க(Prasanna Ranatunga) ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வானது இன்று(06.04.2024) இடம்பெற்றுள்ளது.
குடிநீர் வழங்கும் திட்டம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் நானோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் அரசாங்க வேலைதிட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தினால் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 10 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
