முன்னாள் இந்திய பிரதமரின் பேரனுக்கு ஆயுள் தண்டனை
வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கர்நாடக அரசியல்வாதி பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு தென்னிந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ரேவண்ணா, பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியான பாஜகவின் கூட்டாளியான ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல்வாதி ஆவார்.
34 வயதான அவர் தனது வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மோடியின் கட்சி
முன்னாள் இந்தியப் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், மிக பலம் பொருந்திய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவருமான ரேவண்ணா, 2023ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கான வெளிப்படையான காணொளிகள் வெளிவந்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்தித்தார்.
அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்திருந்தாலும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து மனம் உடைந்து, மன்னிப்புக் கோரியுள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் கூட்டாளியான ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல்வாதி என்பதால் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு உரிமை உண்டு என இந்திய சட்டத்தில் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri
