இந்திய ஆண்கள் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய முதன்மை தேர்வாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
அஜித் அகர்கருக்குப் பதிலாக அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகள்
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தின் அடிப்படையில் பிரக்யான் ஓஜா இந்த 5 பேர் கொண்ட தேர்வுக்குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.

அத்துடன், கிரிக்கெட் ஆலோசனைக் குழு நடத்திய நேர்காணலுக்குப் பிறகு, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஸ் பவார் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவுக்காக 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். இதன்படி 5 பேர் கொண்ட புதிய தேர்வுக்குழுவின் தலைவராக பிரக்யான் ஓஜா செயற்படும் நிலையில், சிவ் சுந்தர் தாஸ், ஆர். பி. சிங், அஜய் ரத்ரா மற்றும் ரமேஸ் பவார் ஆகியோர் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.
இதற்கிடையில், 2023 முதல் முதன்மை தேர்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெறும் அஜித் அகர்கருக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நன்றியை தெரிவித்துள்ளது.
அவரது பதவிக் காலத்தில் இந்திய அணி 3 ஐசிசி கிண்ணங்கள், 2 ஆசியக் கிண்ணங்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து 2 தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.