பிரகீத் எக்னலிகொட வழக்கு! 9 இராணுவத்தினருக்கும் பிணை! சாட்சியாளருக்கு விளக்கமறியல்!
பிரதிவாதிகளுக்கு பிணை
கேலிச்சித்திர செய்தியாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு அதிகாரிகள், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னர் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த பிணையை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பார் அமர்வு இன்று வழங்கியுள்ளது.
சாட்சியாளருக்கு சிறை
அதேநேரம் வழக்கின் சாட்சியாளர் ஒருவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது வரைந்த அரசியல் கேலிச்சித்திரம் ஒன்றுக்காகவே எக்னலிகொட கடத்திச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு எதிரான குற்றம்
எனினும் அவர் தொடர்பான உண்மை தகவல்கள் இன்னமும் அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த சம்பவம், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைமீறல் விடயங்களில் முன்னிலை சம்பவமாக தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது.
கணவருக்காக நீதிகோரி முடியை காணிக்கை செலுத்திய சந்தியா எக்னெலிகொட





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
