சர்ச்சையை ஏற்படுத்திய பிரதேச சபை உறுப்பினரின் பதவி விலகல்.. வெளியான பின்னணி
அண்மையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் கைது செய்யப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதினை தொடர்ந்து, தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் விலகினார்.
நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவாகியிருந்தது.
இந்த தாக்குதல் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றதாகவும் உறுப்பினர் தலைமையிலான கும்பல் ஒன்றே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் பின்வரும் காணொளியில் விளக்கமளித்துள்ளார்.
கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் திடீரென உயிரிழந்த அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்