விடுதலைப் புலிகளின் தலைவரின் இருப்பு - ஆதாரத்தை வெளியிடாமைக்கான பின்னணி : செய்திகளின் தொகுப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(07.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் நாட்டின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு வெளியிடப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மிக நெருக்கமாக செயற்பட்ட கருணா, தயா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் அவர் உயிரிழந்தமைக்கான சாட்சி என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்க தேவையில்லை எனவும் அதனை விட முக்கியத்துவம் செலுத்த வேண்டிய பல்வேறு காரணிகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.