தாய்வானில் 6.3. ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சேதங்கள் தொடர்பில் தகவல்
தாய்வானில் (Taiwan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது (earthquake) நேற்று இரவு (22.4.2024) தாய்வானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள்
இதனால் தலைநகர் தைபேயிலும் (Taipei) நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், பல கட்டிடங்கள் குலுங்கியதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி தாய்வானின் ஹூவாலியன் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது.
இதில் 20ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
