நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி: இன்று மின்தடை நடைமுறையாகவுள்ள விதம் (Photos)
நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி பகல் வேளையில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஐந்து மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அத்துடன் M, N, O, X, Y, Z வலயங்களுக்கு காலை 5 மணி முதல் 8.20 மணி வரையிலும், CC வலயத்திற்கு காலை 6 மணி முதல் 9.20 மணி வரையிலும் மூன்று மணிநேரம் மின்வெட்டப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam