இலங்கை மின்சார சபை முன்றலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் (Photos)
இலங்கை மின்சார சபை பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தினை தற்போது முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை மின்சார சபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டணி நடத்தும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தற்போது இலங்கை மின்சார சபை முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
74 வருட சாபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் மக்களை துன்புறுத்துகின்ற அரசாங்கத்தை விரடியடிப்போம் என்ற பதாதைகளை ஏந்தியவாறு இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை மின்சார சபை பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் வினைத் திறனற்ற தன்மைக்கு எதிர்ப்பை வெளியிடுவதாக இலங்கை மின்சாரசபை தொழிலாளர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு இடையறாது மின்சார விநியோகத்தை வழங்க வேண்டுமென கோரி இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
நாட்டின் அனைத்து மின்சார சபை கிளைகளிலும் இந்தப் போராட்டம் இன்று நண்பகல் நடைபெறவுள்ளது.
செய்தி : கமல்





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
