வடமராட்சி கிழக்கில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க தீவிர முயற்சி

Kilinochchi Minister of Energy and Power Sri Lanka Fisherman Mega Power
By Erimalai Jul 14, 2023 03:08 PM GMT
Report

காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க பூநகரியில் இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில் வடமராட்சி கிழக்கில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சி கிழக்கு மணற்காட்டிலிருந்து தாளையடி வரையான பிரதேசத்தில் 18 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக senok wind power நிறுவனம் அதிதீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வடமராட்சி கிழக்கின் குறிப்பாக அம்மன், மணக்காடு, குடத்தனை, போன்ற கிராமங்களின் கிராம மட்ட அமைப்புகளோடு பிரதேச செயலக அதிகாரிகள் செனொக் வின்ட் பவர் நிறுவன பிரதிநிதிகள் கிராம அலுவலர் தலைமையில் குறித்த கிராம மக்களோடு கலந்துரையாடினர்.

வடமராட்சி கிழக்கில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க தீவிர முயற்சி | Power Wind Mill Plant In Poonery

காற்றாலை மின் உற்பத்தி நிலையம் 

இதில் பிரதேச மக்கள் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் எந்த விடயங்களும் எமக்குத் தெரியாது என்றும் அது தொடர்பில் நாம் துறை சார்ந்தவர்களுடன் உரையாடி ஓர் முடிவுக்கு வருவதற்கு கால அவகாசம் வழங்குமாறு கேட்டிருந்தார்கள்.

இந்நிலையில் அதற்கு பின்னர் எந்தவிதமானதொரு ஒன்று கூடலோ சந்திப்புகளோ குறித்த கிராம மக்களோடு மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க தீவிர முயற்சி | Power Wind Mill Plant In Poonery

அதற்கு சமூகமளிக்குமாறு மணக்காடு தொடக்கம் தாளையடி வரையான கடற்றொழிலாளர்  கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச நிர்வாகம், வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட்ட அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு சென்ற அழைப்பு விடுக்கப்பட்ட கிராம மட்ட அமைப்புகளின் பிரதி நிதிகளை கள ஆய்வில் மட்டும் பங்கு கொள்ளுமாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.

பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள்

இதில் குறித்த பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் எவரும் ஈடுபடாத நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்த மத்திய சுற்றாடல் அதிகார சபையினுடைய அதிகாரியாக தன்னை அறிமுகம் செய்தவர் அவர்களை திருப்பி அனுப்பியிருக்கின்றார்.

இந்நிலையில் சில மணி நேரம் தாமதித்துச் சென்ற ஒரு சமூக மட்ட அமைப்பு தலைவரை இங்கே அரச உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் மட்டுமே இடம்பெறுகிறது. இதில் நீங்கள் பங்கு கொள்ள முடியாது என்றும் அவரை வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கிராம மட்ட அமைப்பினுடைய தலைவர் பிரதேச செயலாளரினுடைய அழைப்பின் பெயரில் தான் நான் இங்கே வந்திருந்தேன். இதனால் நாங்கள் வெளியேற முடியாது. வெளியேறுவது என்றாலும் பிரதேச செயலாளரே சொல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நிலையில்அத்துடன் பிரதேச செயலாளரினால் அனுப்பப்பட்ட கடிதமும் காண்பிக்கப்பட்டு ஏன் அழைப்பு விடுக்கப்பட்டது என கோரப்பட்ட நிலையில் அவர் வெளியேறாமல் இருந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க தீவிர முயற்சி | Power Wind Mill Plant In Poonery

இரகசியமாக நடவடிக்கை

இந்நிலையில் கூட்டம் நிறைவடைந்த பின்னர் அரச திணைக்களின் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றிருந்தார்கள். இது இவ்வாறிருக்க பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் வடமராட்சிக் கிழக்கில் ஏன் இவ்வளவு இரகசியமாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.

இதனால் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.  இதைவிட கிராம மட்ட அமைப்புகள் பல சேர்ந்து ஒரு சில தினங்களில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்த இருப்பதாக தங்களுடைய பெயர்களை குறிப்பிட வேண்டாம் என்று பல சமூகம் மட்டும் அமைப்பு தலைவர்கள் எமக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவும் இல்லை, அது தொடர்பில் எந்த விதமான உரையாடல்களும் இடம்பெறாத நிலையில் ஏன் இவ்வாறு இரகசியமான முறையில் பிரதேச செயலாளரால் இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது பலத்த சந்தேகமான விடயமாகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் போது மக்கள் அதனை அமைக்க வேண்டாம் என்று பல்வேறு காரணங்களை கூறி பல நாள் போராட்டங்களை மேற்கொண்டும் அவர்கள் மிரட்டப்பட்ட நிலையிலே குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக யாழ்ப்பாணம் தென்மராட்சி மறவன்புலவில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் நிலையங்களுக்கு பிரதேச மக்கள் பலத்தை எதிர்ப்பை ஒன்றிணைந்து வெளிக்காட்டியிருந்த நிலையில் அவர்கள் அடக்கப்பட்டு சட்டத்தின் நிறுத்தப்படும் அவர்கள் தண்டிக்கப்பட்டே அந்த காற்றாலை மின் உஉற்பத்தி நிலையங்கம் அமைக்கப்பட்டுருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி தலமையில் இடம் பெற்ற கூட்த்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, கனிய வளங்கள் மற்றும் புவி சரிதவியல் மற்றும் சுரங்க திணைக்கள், கடற்படை வின்ட பவர் நிறுவனம்உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்

வடமராட்சி கிழக்கில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க தீவிர முயற்சி | Power Wind Mill Plant In Poonery

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம்

20 Aug, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

17 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US