சீனாவுக்கும் கொரியாவுக்கும் வழங்கப்பட உள்ள மின் உற்பத்தி நிலையங்கள்
இலங்கையின் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் சீன நிறுவனத்திற்கு

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையத்தை நீன நிறுவனத்திற்கும் லக்சபான நீர் மின் உற்பத்தி நிலையத்தை தென் கொரிய நிறுவனம் ஒன்றுக்கும் வழங்குவதற்காக இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் பின்னர் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்தை அரசாங்கம் கொள்வனவு செய்யும் விலை மற்றும் அரசாங்கம் நுகர்வோருக்கு வழங்கும் விலை தொடர்பாக தீர்மானிப்பதற்காக தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
லக்சபான நீர் மின் உற்பத்தி நிலையம்

லக்சபான நீர் மின் உற்பத்தி நிலையத்தை தென் கொரிய நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் தீர்மானத்திற்கு அமைய மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய எதிர்பாரத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri