நாட்டின் சில இடங்களில் மீண்டும் மின்தடை! வெளியான அறிவிப்பு
நாட்டின் சில இடங்களில் மீண்டும் மின்சார விநியோகத் தடை ஏற்படும் என மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய,எதிர்வரும் தினங்களில் நாளாந்தம் மாலை 6.30 தொடக்கம் 9.30 மணி வரையான காலப்பகுதியில் 30 நிமிட மின் விநியோகத் தடை ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின்பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில் தேசிய மின் கட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் சில இடங்களில் மீண்டும் மின்சார விநியோகத் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மினசாரத் தேவை அதிகமுள்ள காலங்களில் வழமை போன்று தடையின்றி மின்சார விநியோகம் இடம்பெறும் என இலங்கை மின்சார சபை உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.