இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தும் அவசியமில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தனியார் நிறுவனங்களில் தனியான ஜெனரேட்டர்கள் இருந்தால் குறுகிய காலப்பகுதிக்கு அவற்றினூடாக மின் உற்பத்தியை பெற்றுகொள்ள முடியும்.
முடிந்தளவிற்கு இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். தற்போதையளவுக்கு தேவையான மின் உற்பத்தி இடம்பெறுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைவாக தொடர்ந்து மின்வெட்டு அமுல்படுத்தப்படாது. ஒருவேளை மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழக்கும் பட்சத்தில் மின்வெட்டு இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
என்ற போதும் 100 மெகாவோட் மின் உற்பத்தி நிலையம் செயலிழக்குமாக இருந்தால் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது.
அதற்கு மேற்பட்ட மெகாவோட் மின் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்தால் மாத்திரம் ஒரு மணிநேரம் அல்லது ஒன்றரை மணிநேரம் மின் வெட்டு மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
