மின் பாவனையாளர்களுக்கு அவசர அறிவிப்பு!
மின் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அல்லது மின் விநியோகத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
இதனால் அண்மைய நாட்களாக நாட்டின் பல பாகங்களில் மின் தடை ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
எவ்வாறாயினும், நேற்றைய தினம் இந்த 40 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு கடன் அடிப்படையில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
