மின்வெட்டு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும்!
மின்வெட்டு குறித்து இன்றைய தினம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்நிலைகளின் நீரை சேமித்துக் கொள்ளும் நோக்கில் குறிப்பிட்ட காலத்திற்கு மின்சாரத்தை துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அதிகாரபூர்வ நேர அட்டவணை இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளது.
நீர்நிலைகளில் தற்பொழுது காணப்படும் நீர் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலைமைகள் குறித்து நேற்றைய தினம் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அதன் பின்னர் மின் துண்டிப்பினை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நீர் மின் உற்பத்தியை தொடர்ந்தும் முன்னெடுத்தால் விவசாயத்திற்கு நீர் இருக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
