ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு! பெரும் நெருக்கடியில் சிக்கிய மக்களுக்கு தீர்வு?
மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அல்லது தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 5ஆம் திகதி முதல் தடையின்றி மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிடம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்றும் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை மின்வெட்டு இடம்பெறும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பு தவிர்ந்த ஏனைய இடங்களில் நாளாந்தம் 6 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
இந்நிலையில் மின்சார தடையை நீக்க ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.