கோழி ஏற்றிச்சென்ற வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: பெண் ஒருவர் படுகாயம்(Video)
மட்டக்களப்பு - கொழும்பு வீதி ஊறணி சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கோழிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றும் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று(02) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பகுதியிலிருந்து காத்தான்குடி பிரதேசத்தை நோக்கி கோழிகளை ஏற்றிக் கொண்டு பிரயாணித்த கனரக வாகனம் சம்பவதினமான இன்று அதிகாலை 5 மணியளவில் ஊறணிக்கு சென்ற மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
மட்டக்களப்பு - ஊறணி சந்தியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை சுமார் 50 மீற்றர் தூரம்வரை மோட்டார் சைக்கிளை இழுத்துச் சென்ற நிலையில் கனரக வாகனம் வீதியைவிட்டு விலகித் தடம்புரண்டுள்ளதுடன் கனரக வாகன சாரதியைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.









தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
