திருகோணமலை நகர் எங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்(Photos)
அரச, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கக்கோரி திருகோணமலை நகர் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரச, தனியார்த்துறை சம்பளத்தை ரூபா 15000ல் அதிகரித்து, தனியார்த் துறையின் ஆக குறைந்த சம்பளத்தை ரூபா 26000 ஆக்கு மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ரூபா 1500 ஆக ஆக்கு என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் திருகோணமலை நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் எனும் பெயரில் பிரசுரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அரச தனியார்த்துறை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி
சுவரொட்டிகள் பிரசுரிக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாணத்தின் ஆசிரியர்களுக்கான
5000 ரூபா கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
