வன்னியில் வாக்களிக்க தகுதியானோர் விபரம் வெளியானது
ஜனாதிபதித் தேர்தலில் வன்னி (Vanni) மாவட்டத்தில் 30,6081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக வவுனியா (Vavuniya) மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (25.08.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 30,6081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 12,8585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86,889 வாக்காளர்களும், மன்னாரில் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்கெண்ணும் நிலையங்கள்
அத்துடன், வன்னித் தேர்தல் தொகுதியில் 13,389 தபால் மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 228 தபால் வாக்களர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தேர்தலில் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சாதாரண வாக்கு எண்ணும் பணிகளுக்காக வவுனியாவில் 12, முல்லைத்தீவில் 8, மன்னாரில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தபால் வாக்குகளை எண்ணுவதற்காக 10 நிலையங்களும் என மொத்தமாக 37 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |