இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் பதிவான வரலாற்று சாதனை
இலங்கை வரலாற்றில் கடந்த ஆண்டு அஞ்சல் திணைக்களம் ரூ.13,450 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
தபால் தலைமையகத்திற்கு ரூ.590 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 10 லொறிகள் மற்றும் 20 குரூ கெப் வண்டிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,
அபிவிருத்திக்கான செயற்றிடங்கள்
பேரிடர் ஏற்பட்டிக்காவிட்டால் அதிக வருமானத்தை ஈட்ட முடிந்திருக்கும். அஞ்சல் துறை இரண்டு பேரிடர்களை எதிர்கொண்டதால் வருமானம் ஒரு வரம்பிற்குள் சுறுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் வருமான இலக்குகள் அடையப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், தபால் ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கான தபால் கொள்கலன்கள் (Bicycle Carriers) விநியோகம், செயல்பாட்டு கட்டுப்பாட்டு அலகு திறந்து வைப்பு மற்றும் தபால் நிலையங்களின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் டெஸ்க்டாப் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் டெப் இயந்திரங்கள் விநியோகம் ஆகியனவும் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றன.
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam