பிரித்தானிய அஞ்சலகங்களில் கடந்தகாலங்களில் மாயமான பெருந்தொகை பணம்! வெளியாகியுள்ள தகவல்
பிரித்தானியாவின் அஞ்சல் அலுவலகங்களில் நடந்த பெருந்தொகை நிதி மாயமான சம்பவத்தில் கடந்த காலங்களில் பல அஞ்சல் அதிபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு செய்யாத குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்ததாக ஹரிஜிந்தர் பூடோய் என்பவர் தெரிவித்துள்ளதுடன் தண்டனை அனுபவித்த பின்னரும், சிறை கதவின் எதிரொலி தனக்கு இன்னும் கேட்பதாக கூறியுள்ளார்.
“எனக்கு மூன்று ஆண்டு மற்றும் மூன்று மாத சிறை தண்டனை கிடைத்தது. ஆனால் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தது போல் உணர்கின்றேன் என நான் அடிக்கடி கூறுவேன். காரணம் நான் என் பெயரை அழிக்க வேண்டியிருந்தது” எனவும் அவர் கூறியுள்ளார்.
பூடோய் மற்றும் அவரது மனைவியும் 5 ஆண்டுகளாக Nottinghamshire சந்தை நகரில் Sutton-in-Ashfield என்ற இடத்தில் அஞ்சல் நிலையம் ஒன்றை நடத்தி வந்தனர். அவர்கள் வர்த்தகத்தை மாற்ற காலத்தையும் பணத்தையும் முதலீடு செய்திருந்தனர்.
கணக்காய்வாளர்கள் வந்து ஆய்வு செய்த போது, தவறு இருப்பதாக சந்தேகிக்கவில்லை. அவர்கள் எந்த பிரச்சினைகளும் இல்லாத நிலையில் முந்திய வாரத்தில் கணக்காய்வு உட்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து பூடோய் 2 லட்சத்து 8 ஆயிரம் பவுண்களை கொள்ளையிட்டதாக கைது செய்யப்பட்டு, குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
மேல் நீதிமன்றம் இந்த குற்றத்தை தள்ளுபடி செய்ய கடந்த வருடம் வரை சென்றது. எனினும் அவர்களின் துயரம் தோய்ந்த காலம் இன்னும் முடியவில்ல என அவர்கள் உணர்கின்றனர். தம்மை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தாலும் சில கேள்விகளுக்கு பதில் வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
பெப்ரவரி 14 ஆம் திகதி திங்கள் கிழமை பூடோய் போன்று அஞ்சல் அலுவலக கிளைகளில் முகாமையாளர்களாக பணிப்புரிந்த 706 பேர் குற்றவாளிகளாக மாற்றியமை சம்பந்தமான பொது விசாரணை சாட்சியங்களை கேட்டறிதல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த குற்றவாளிகள் பிரித்தானிய சட்ட வரலாற்றின் நீதியை வழங்கும் முறையை கேள்விக்கு உள்ளாகியுள்ளதுடன் அந்த குற்றச்சாட்டுக்கள் படிப்படியாக நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி வருகிறது.
மேலும் ஆயிரக்கணக்கான அஞ்சல் கிளைகளில் குறைகளை கண்டறிய முயற்சிக்கப்பட்ட போது பெரும் தொகை பணம் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளதுடன் அஞ்சல் அலுவலகங்கள் அவற்றை திரும்ப செலுத்த ஆரம்பித்துள்ளன.
இந்த பிரச்சினைக்கு அஞ்சல் நிலையங்கள் கணனி தொழிற்நுட்ப தவறுகளே காரணம் எனக் கூறப்படுகிறது இதற்கான முக்கி காரணம் பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர் கொள்வனவு செய்த பின்னர் தாம் அடையாளப்படுத்திய பொருட்களை நீக்கினால் அவை குறித்த கணணி மென்பொருள் வாடிக்கையாளருக்கு நீக்கியதாக காட்சிப்படுத்தப்பட்டு பணத்தினை அறவிடும், ஆனால் கணக்கிளை முடிக்கும் போது குறித்த கணணி மென்பொருள் வாடிக்கையாளர் ஆரம்பத்தில் அடையாளப்படுத்திய பொருட்கள் அனைத்திற்கும் பணத்தினை அறவிட்டதாக கணக்கினை முடிக்கும், இதன் போதே மேற்குறித்த தவறு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹொரைசன் என்ற மென்பொருள் 1999 ஆம் ஆண்டு முதல் அஞ்சல் வலையமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜப்பானிய Fujitsu நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, பரிவர்த்தனைகள், கணக்கியல் மற்றும் பங்கு பேச்சு போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன்.
இவை தொடர்பான விசாரணைகள் அடுத்தாண்டு ஆரம்பித்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கிளை அஞ்சல் அதிபர்களை நீக்கியது என்பதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
விசாரணைகளின் முடிவில் பிரதான அஞ்சல் அதிபர்களிடம் ஒரு லட்சம் பவுண்ட்கள் வரை அபராதம் அறவிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.