சுமந்திரன் முதலமைச்சர் பதவி வழங்கினால் எனது முடிவு இதுவே! சீ.வி.கே திட்டவட்டம்
தான் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை தேர்தலிலே ஒருகாலமும் போட்டியிட மாட்டேன் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தலைமை வேட்பாளராக சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டால் மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.கே.சிவஞானம் தான் முதல் தெரிவாக இருக்கிறார். இந்த உத்தரவாதம் சுமந்திரனால் சீ.வி.கே.சிவஞானத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார்களே அது தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
நானே பகிரங்கமாக கூறிவிட்டேன் இனிமேல் எந்த தேர்தலிலும் பங்கேற்க மாட்டேன் என்பதை. இதனை நான் தெளிவாகவாக கூறியிருக்கிறேன். அவ்வாறு இருக்கும் போது எப்படி சுமந்திரன் எனக்கு முதலமைச்சர் பதவி தருவது?
நான் ஒன்றை தெளிவாக கூற விரும்புகிறேன் சுமந்திரனை ஆதரித்து பதவியை தேட வேண்டிய தேவை எனக்கில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |