உணவு மற்றும் பானங்களுக்கான மக்களின் தேவை குறைகிறது - மத்திய வங்கி அறிவிப்பு
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் உணவு மற்றும் குளிர்பானத் துறையில் தேவை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், நுகர்வோரின் வாங்கும் திறன் குறைந்துள்ளதாகவும், எரிபொருள் பற்றாக்குறையே இதற்குக் காரணம் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், கடைகளுக்கு நுகர்வோர் வருகையும் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த ஜூலை மாதம், ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், உற்பத்தித் துறையில் வாங்குபவர்களின் குறியீடு, 2.7 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உற்பத்தி நடவடிக்கைகளிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மொத்த கொள்வனவுகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடும் போது குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.