ஆயுத கும்பலால் கடத்தப்பட்ட 300இற்கும் மேற்பட்ட மாணவர்கள்.. பொப் லியோ விடுத்துள்ள கோரிக்கை
நைஜீரியாவின் கத்தோலிக்க பாடசாலை ஒன்றில், துப்பாக்கிகளுடன் நுழைந்த ஆயுத கும்பல், கடத்தி சென்ற 300இற்கும் மேற்பட்டவர்களை விடுவிக்குமாறு பொப் லியோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, 12 ஆசிரியர்கள் உட்பட 315 பேர் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே கடந்த 17ஆம் திகதி கெபி மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், 25 மாணவிகளை கடத்திச் சென்றுள்ளனர்.
தீவிர நடவடிக்கை
அதேவேளை, கடந்த 18ஆம் திகதி எர்கு நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 40 பேரை ஆயுதக்குழுவினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

அதில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 38 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்றைய தினம் நைஜீரீயாவின் வடகிழக்கு பகுதியில் ஆயுதக்குழுவினருடன் நடந்த மோதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு இதுவரை எந்த ஆயுதக்குழுவினரும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது அந்நாட்டு தரப்பில் மட்டுமின்றி சர்வதேசத்திலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடத்தப்பட்டவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ Cineulagam