இலங்கையில் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ள பாப்பரசர்! இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பு!
பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கையில் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்
அத்துடன் ஆளும் அரசியல் தலைவர்கள் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்த்து, மனித உரிமைகள் மற்றும் குடியியல் உரிமைகளுக்கு முழு மரியாதையை உறுதிப்படுத்தவேண்டும் என்று பொறுப்புகள் உள்ள அனைவரையும் தாம்; கேட்டுக்கொள்வதாக பாப்பரசர் கோரியுள்ளார்;.
வன்முறைக்கு அடிபணியாமல், அமைதியான அணுகுமுறையைப் பேணுமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்;.
நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து சமீப காலங்களில் தங்கள் கோரிக்கைகளை ஒலிக்கும் இளைஞர்களுக்கு தனது வாழ்த்துக்களை அனுப்புவதாக பாப்பரசர் தெரிவித்துள்ளார்
கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கண்டித்த 24 மணி நேரத்திற்குள் பாப்பரசரின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன
போராட்டக்காரர்களைத் தாக்குவதற்காக அலரிமாளிகையில் இருந்தே தாக்குதல்காரர்கள் அனுப்பப்பட்டனர் என்று கர்தினால் குற்றம் சுமத்;தியிருந்தார்





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
