நீடித்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் பதற்றம்: ஜோ பைடனுன் போப் பிரான்சிஸ் விசேட உரையாடல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் , போப் பிரான்சிஸ் தொலைபேசி வாயிலாக உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் - ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான தாக்குதல் தற்போது வரை நீடித்து வருகிறது.
இதில், இஸ்ரேல் தரப்பில் 1,400 பேரும், பாலஸ்தீனியர்கள் 4,469 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அமைதிக்கான பாதை
இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க முயற்சித்து வருவதாக அமெரிக்க தரப்புக்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில் வத்திகான் கத்தோலிக்க திருச்சபையின் போப் பிரான்சிஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த உரையாடலில்,
“உலகில் பல்வேறு மோதல்கள் மற்றும் அமைதிக்கான பாதைகளை அடையாளம் காண வேண்டியதன் அவசியம் மிக முக்கியமான ஒன்றாகும்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.” என வலியுறுத்தியதாக கூறப்பட்டுகிறது.