போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்பில் வத்திக்கான் வெளியிட்டுள்ள தகவல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸின்(Pope Francis) உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புனித பாப்பரசர் பிரான்சிஸிற்கு இன்னும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
அதன் காரணமாக அவருக்கு செயற்கை ஒக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகின்றது.
பாப்பரசரின் உடல்நிலை
எனினும் போப் ஆண்டவரின் தற்போதைய உடல்நிலையை சரி செய்ய இன்னும் 24 அல்லது 48 மணிநேரம் தேவை என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

88 வயதான போப் பிரான்சிஸ், நுரையீரலில் ஏற்பட்ட நிமோனியா தொற்று காரணமாக ரோம் நகரில் உள்ள கேமேலி மருத்துவமனையில் கடந்த 14ம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாகும் 25 வயது நடிகை.. SMS கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் Cineulagam