அநுர ஆட்சியிலும் மாறாத தரமற்ற மருந்து இறக்குமதி
இலங்கைக்கு சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இதய நோயாளிகளுக்கு வழங்கப்படும் டெனெக்டேஸ் என்ற மருந்தின் தரம் குறைவாக இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சராக நளிந்த ஜயதிஸ்ஸ உள்ள நிலையில், இந்த தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏகபோக உரிமை
மக்கள் இந்த விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுகாதாரச் செயலாளர் அவசர விசாரணை நடத்தி இது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பல மருந்து நிறுவனங்கள் நாட்டிற்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் ஏகபோக உரிமையை வைத்திருப்பதாகவும் இதனால் மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள், அந்த நிறுவனங்களை அடையாளம் காணத் தவறியது வருந்தத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
