பூநகரி கோட்டையின் தொன்மை பாதுகாக்கப்படும்: அமைச்சர் வழங்கியுள்ள அனுமதி
பூநகரி கோட்டையை பாதுகாப்பதுடன், அதனை அண்மித்து பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை அமைப்பது தொடர்பில் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு கடந்த 4ம் திகதி விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மண்ணித்தலையில் அமைந்துள்ள சோழர்காலத்து சிவனாலயத்தினை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார்.
அன்றைய தினம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் பூநகரி பிரதேச சபை உறுப்பினர் குலராச சிங்கம் புவியரசன் முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள கோட்டையை பாதுகாப்பதுடன், அதன் தொன்மையையும் பாதுகாத்து, அப்பகுதியை அண்மித்து சிறுவர் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு அனுமதிக்குமாறு குறித்த பிரதேச சபை உறுப்பினரும், பூநகரி பிரதேச செயலாளரும் அமைச்சரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தனர்.
குறித்த பூங்கா அமைப்பதற்கு உரிய முறையில் திட்டத்தினை தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும், அதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கலந்துரையாடலின்போது நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவருமான அங்கயன் இராமநாதன், அமைச்சின் செயலாளர் நிசாந்தி ஜெயசிங்க, திணைக்கள பொது முகாமையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


பதினாறாவது மே பதினெட்டு 4 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
