பூநகரி - வலைப்பாடு கிராமத்தில் உறவினர்கள் 10 பேருக்கு தொற்று! - வடக்கில் இன்று 12 பேர் அடையாளம்
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி - வலைப்பாடு கிராமத்தில் 10 பேருக்கு இன்று கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 379 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 12பேர் உள்ளிட்ட 17 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வலைப்பாடு கிராமத்தில் முன்னதாக ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தனிமைப் படுத்தப் பட்டிருந்தவர்களில் 10 பேருக்கே இன்று பி.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 10 பேரும் முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் உறவினர்களாவர்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
