பாரம்பரிய நடனங்களுடன் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொங்கல் விழா! (Video)
லயன்ஸ் 306 B 1 மாவட்டத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் பொங்கல் விழா பாரம்பரிய நடனங்களுடன் இன்று காலை (15-01-2022) இடம்பெற்றது.
இவ்விழாவிற்கு 306B 1 மாவட்ட ஆளுநர் லயன் ஆர்.எல். ராஜ்குமார் (PMJF MAF) மற்றும் அவரது பாரியார் லயன் மேரியன் தலைமை தாங்கினர்.
அத்துடன், மாவட்டத்தின் முதலாம், இரண்டாம் துணை ஆளுநர்கள், முன்னாள் ஆளுநர்கள் உட்பட லயன்ஸ் கழக உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதன்போது பல்வேறு பாடசாலை மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து தைப்பொங்கல் விழாவை மெருகூட்டும் வகையில் சமய மற்றும் கலாசார நடனங்களை நடாத்தி பார்வையாளர்களை வியக்கச்செய்திருந்தனர்.
“இன, மத, மொழி பேதமின்றி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதைபோன்று நம் எல்லோரும் தேவையறிந்து, தும்பத்தில் வாழும் ஏழை மக்களுக்காக பாடுபட வேண்டும் என்றும் மாவட்ட ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.













உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam