குளங்களின் வரட்சி நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்கள் (Video)
திருகோணமலை - மொரவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் எட்டு குளங்களில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலைமை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது நிலவும் வறட்சியினால் பன்குளம், பாண் மதவாச்சி குளம், வேப்பம்குளம், பத்தாம் கட்டைகுளம், கட்கட்குளம், முதலியார் குளம், வெல்வெறி குளம், நொச்சிக்குளம் போன்ற எட்டு குளங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடுமையாக பாதிப்பு
இதனால் கடற்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அக்கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சமுர்த்தி தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







