பொன் சிவகுமாரின் ஐம்பதாவது நினைவு தின விழாவிற்கு அழைப்பு
பொன் சிவகுமாரின் 50ஆவது ஆண்டு நினைவு தின விழாவிற்கு சிவகுமார் அறக்கட்டளை உறுப்பினர் செந்தூரன் (Sendhuran) அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நினைவு தின விழாவானது, யாழ். (Jaffna) உரும்பிராயில் அமைந்துள்ள பொன் சிவகுமாரின் நினைவு தூபியில் நாளை (05.06.2024) இடம்பெறவுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சிவகுமார் அறக்கட்டளை உறுப்பினர் செந்தூரன் இந்நிகழ்விற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முழு நீளச்சிலை
இதன்போது கருத்துரைத்த அவர், "மண்ணுக்காக தன் உயிரை நீர்த்த பொன் சிவகுமாரின் 50ஆவது ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்க உள்ளோம்.
சிவகுமாரன் நினைவு தோகை மீள அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) முன்னின்று உழைத்தார்.
எனவே, அவரது முயற்சியின் காரணமாக உரும்பிராய் பகுதியில் சிவகுமாரின் முழு நீளச்சிலை மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டது.
ஆகவே, கட்சி பேதங்களை கடந்து குறித்த நிகழ்வில் அனைவரும் ஒன்று கூடுமாறு அறக்கட்டளை குழு சார்பில் அழைப்பு விடுக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |