இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறிவரும் பொலித்தீன் பாவனை! - அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் பல்பொருள் அங்காடிகளால் ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 100 பில்லியன் பொலித்தீன் உறைகள் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 10 மில்லியன் மதிய உணவு தாள்கள் (Lunch Sheets) பயன்படுத்தப்படுகின்றன.
இவையே சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பின் விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்ற உலக புவிதின நிகழ்வின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது மரங்களை நாட்டுவது என்று பலர் கருதுகின்றனர்.
எனினும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் முழு உலகிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. உலகில் மதிய உணவுத் தாள்களைப் பயன்படுத்தும் (Lunch Sheets)ஒரே நாடு இலங்கை மாத்திரமேயாகும்.
இலங்கையின் மக்கள் தொகை 21 மில்லியன். எனினும் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் மதிய உணவுத் தாள்கள் (Lunch Sheets)மக்களால் சுற்றுச்சூழல்களில் சேர்க்கப்படுகின்றன என்று அமைச்சர் கூறினார்.
நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க,
ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் கொழும்புக்கு வருகை தருவதாகவும், இதேபோன்ற எண்ணிக்கையிலான வாகனங்கள் நகரத்திற்குள் நுழைவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு மிக அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
