குட்டையை குழப்பி நாட்டை குட்டிச்சுவராக்கி சட்டைப்பை நிரப்பும் அரசியல்வாதம்! - ஜி.ஶ்ரீநேசன்
அரசியல்வாதிகளில் இருவகையானவர்கள் உள்ளனர். சமூக பொருளாதார அடிப்படையிலும் இப்படியானவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம். முற்போக்குவாதிகள், பிற்போக்குவாதிகள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முற்போக்குவாதிகள் என்பவர்கள் புரட்சிகரமான சிந்தனை உள்ளவர்கள் . இவர்கள் இன,மத,மொழி,குல,நிற,பால்,வர்க்க பிரதேச வேறுபாடுகளைக் கடந்து சமத்துவ சிந்தனையோடு செயற்படக் கூடியவர்கள்.
இவர்கள் பெரும்பாலும் நியாயமாகச் சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பர். பொதுவாக இடதுசாரிகளை,சோசலிச சமத்துவவாதிகளை முற்போக்குவாதிகள் என்று கூறுவர். இவர்கள் ஊழல், மோசடிகள். கையூட்டுகள் அற்றவர்களாகவும் வீண் விரயங்களை ஏற்படுத்தாதவர்களாகவும் செயற்படுவார்கள்.
அதேவேளை பிற்போக்குவாதிகள் என்பவர்கள் பழைமைவாதிகள், அடிப்படைவாதிகள் என்றும் அழைக்கப்படுவர். இவர்களிடம் புரட்சிகரமான சிந்தனைகள் நடத்தைகள் இருப்பதில்லை.
இந்தப் பிற்போக்குவாதிகளில் அதிகமானவார்கள் தமது அரசியல் சமூகத் தேவைக்காக பல பிற்போக்கு வாதவங்களை உருவாக்கி மக்களைப் பிரித்தாளுவர். குறிப்பாக அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைகளுக்காக அரசியல் இலாபத்திற்காக இவற்றைப் பயன்படுத்துவர். அப்படியான பிற்போக்குவாதங்கள் எவை எனப்பார்ப்போம்.
1-இனவாதம்
2-மதவாதம்
3-மொழிவாதம்
4-நிறவாதம்
5-குலவாதம்/சாதிவாதம்
6-வர்க்கவாதம்
7-பிரதேசவாதம்
8-பால்நிலைவாதம்
9-பராயவாதம்/இளைஞ்ர்-முதுஞர்வாதம்.
இலங்கையைப் பொறுத்த மட்டில் இனவாதம்,மதவாதம்,மொழிவாதம் என்பன குறுகிய அரசியல் இலாபத்திற்காக 1920 இல் இருந்து இன்றுவரை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சுதந்திரத்தின் பின்னர், சிங்கள பெளத்த வாதங்கள் அரசியலில் அதிகம் இலாபமீட்டக் கூடிய அடிப்படை வாதங்களாகப் பிற்போக்கான அரசியல்வாதிகளால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் இனப்பகை இனமுரண்பாடு இனமோதல் இலவன்முறை இந்நாட்டில் காணப்படுகின்றன. இதன் உச்சமாக 30 ஆண்டுகள் இனப்போர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாடும் மக்களும் தோல்வியடைந்தாலும் இனவாதிகள் மதவாதிகள் தேர்தலில் வெற்றியடைகின்றனர். தமது அரசியல் வியாபாரத்தில் இலாபமும் அடைகின்றனர்.
தற்போது அரசியல் இலாபத்திற்காக சமூகத்தைப் பிரித்து அரசியல் இலாபங்கள் அடைவதற்காக,தேர்தல் வெற்றிகள் பெறுவதற்காக பராயநிலைகளை அடிப்படையாகக் கொண்டு இளைஞர் முதியோர் என்ற பாகுபாடுகளை ஏற்படுத்தச் சிலர் முயற்சிக்கின்றார்கள்.
இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியது அவசியம். ஆனால் அந்த இளைஞர்கள் அந்தக் கடசி இந்தக் கட்சி என்று தடுமாறுகின்றவர்களாகவோ சுயநலத்திற்காக இளைஞர்களைத் தவறான பாதைகளுக்கு இழுத்துச் செல்கின்றவர்களாகவோ இருக்கக் கூடாது.
கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு தம்மை இளைஞர்கள் என்று விலாசப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்,மாகாணசபை உறுப்பினர்,உள்ளூராட்சி உறுப்பினர்கள் பதவிவெறியால் பணமோகத்தால் கட்சி தாவியும் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுக்கட்சிகளில் போட்டியிட்டு மக்களால் படிப்பினை பெற்றவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தும் உள்ளனர். புதியவர்கள் மட்டுமல்ல கடந்த காலத்தில் முதியவார்கள் சிலரும் கட்சி தாவிச்சென்றுள்ளனர்.
யாராக இருந்தாலும் கொள்கைப் பற்று, தளம்பல் நிலையின்மை, குறுகிய மனப்பாங்கு இன்மை, கட்சியைச் சிதைக்காத தன்மை, ஊழல் மோசடி அற்ற தன்மை, ஒற்றர்தன்மை அற்றவர்கள், அர்ப்பணிப்பானவர்கள், ஒழுக்கமானவர்கள், உளறுவாயற்ற நாக்காவலர்கள் தமிழ் தேசியப்பரப்பில் பணிகளாற்றத் தகுதி உள்ளவர்களாவர்.
குறுகிய அரசியல் தேவைக்காக குறுகிய வாதங்களைத் தேர்தல்களின் போது கட்சிக்குள் இருந்து கொண்டே இடத்திற்கேற்றவாறு விதைத்து வாக்குகளை அறுவடை செய்கின்றவர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு எதிர்மறையானவர்கள் ஆவார்.
கட்சிக்குள்ளே இருந்து கொண்டு வார்த்தைகள், நடைமுறைகளால் கட்சியைப் பலவீனப்படுத்துகின்றவர்களை ஆழமாக அவதானித்து அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். மேலும் போதை நாட்டம்,பேதை நாட்டம் உள்ளவர்களும் கட்சிகளின் நன்மதிப்பைச் சிதைத்து விடுவார்கள்.
இன்னும் சிலர் தமது வெற்றிக்காக மட்டும் வித்தியாசமான பாணியில் செயல்பட்டு,கட்சியின் வெற்றியைப் பின் நோக்கித தள்ளிவிட்டு தாம் தனிப்பட்ட செல்வாக்கில் வென்றதாக இறுமாப்பாகப் பேசுவதும் உண்டு.அப்படியென்றால் இவர்கள் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்டு இதனை நிரூபித்துக்காட்டியிருக்கலாம்.’
கட்சி தோற்றுவிட்டது,நான் வென்றுவிட்டேன்’என்பது தன்னடக்கம் இல்லாத தமது வெற்றிக்காக உழைத்து வெற்றியடையாதவர்களையும்,கட்சியையும் சிறுமைப்படுத்துகின்ற பக்குவமற்ற பண்பற்ற கருத்தாகவே அமையும்.
பிரதேசத்திற்கோர்வாதம் சாகியத்திற்கோர்வாதம்
பராயத்திற்கோர்வாதம் போதையிலோர்வாதம் குறைந்த வயதில் ஒருவாதம் கூடிய வயதில்
மறுவாதம் என்பதெல்லாம் அடிப்படையற்ற அரசியல் பிழைப்புவாதமாகவே
அமையும்.அர்த்தமான வாதங்களாக அமையாது.குறுகிய காலத்தில எல்லாம் வெளுத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை மக்களுக்கு உதவ தேநீர் மொய் விருந்து நடத்தும் நபர்! யார் அவர்? குவியும் பாராட்டுகள் News Lankasri

இரு நாடுகளில் நிரந்திர குடியுரிமை! மோசடி செய்த பல கோடியுடன் சொகுசாக வாழ்ந்த தமிழ் தம்பதி.. வெளிவரும் பகீர் தகவல் News Lankasri

கேன்ஸ் பட விழாவில் ஆடையில்லாமல் தவித்த நடிகை பூஜா ஹெக்டே - சாப்பிட முடியாமல் தவித்த பரிதாப நிலை! Manithan

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

பேஸ்புக் காதல் மயக்கம்! ரகசிய கோப்புகளை பெண்ணுக்கு அனுப்பிய ராணுவ வீரர்! பின்னர் தெரிந்த அதிர்ச்சி உண்மை News Lankasri

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு என்ன சொல்ல விரும்புறீங்க? ஆங்கிலத்தில் பதிலளித்த பேரறிவாளன் வீடியோ News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada
20 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022