மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதாக அரசியல் இருக்க வேண்டும்:எஸ்.வியாழேந்திரன் (Video)
தமிழ் மக்கள் மத்தியில் உரிமையினைப்பெற்றுத்தருவோம் ஈழத்தினை பெற்றுத்தருவோம் என்று பேசி அந்த மக்களின் வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றதன் பின்னர் அவர்களினால் அந்த மக்களுக்கு குடிநீரைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாத சூழ்நிலையே காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதி மக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம் இன்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 90 வீதமான குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்.பிரச்சினைகளைப்பற்றி எல்லோரும் பேசமுடியும்.ஆனால் அந்த பிரச்சினைகளுக்கான தீர்வினைப்பெற்றுக்கொடுப்பது என்பது இலகுவான விடயம் அல்ல.
பிரச்சினைகளை எல்லோரும் பேச முடியும்.மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும்,மக்கள் பிரதிநிதிகள் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆனால் மக்கள் பிரதிநிதிகளும் தற்போது பிரச்சினைகளையே பேசுகின்றனர்.மக்களும் அழுகின்றார்கள்,அவர்களுடன் இணைந்து மக்கள் பிரதிநிதிகளும் அழுகின்றனர்.அவ்வாறானால் அந்த மக்களின் பிரச்சினையை யார் தீர்த்துவைப்பது.
நாங்கள் மக்களின் தலைவர்கள்,மக்களின் பிரதிநிதிகள் எங்களை தெரிவு செய்தால் உரிமையினைப் பெற்றுத்தருவோம், ஈழத்தினை பெற்றுத்தருவோம் அதைப்பெற்றுத்தருவோம் என்றெல்லாம் பேசி அந்த வாக்குகளில் வெற்றிபெற்றதன் பின்னர் குடிநீரை கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.
மக்களின் அன்றாட பிரச்சினையை கூட தீர்க்க முடியாத நிலையே உள்ளது. ஒரு சமூகத்தின் வளர்ச்சியைப்பற்றி சிந்திப்பதாகயிருந்தால் தமிழர்களின் அரசியல் மாற்றப்பட வேண்டும்.தமிழர்களின் அரசியலில் உள்ள சாபக்கேடும் இதுவாகவேயிருக்கின்றது.
தமிழ் சமூகம் மற்றைய சமூகத்திற்கு இணையாக வளர்த்தெடுக்கப்பட வேண்டுமானால்,அனைத்து துறைகளிலும் வளர்த்தக்கப்பட வேண்டுமானால் தமிழர்களின் அரசியல் அடிப்படையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதாக அந்த அரசியல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.













ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
