புலி நீக்க அரசியல் என்பது ஈழத் தமிழரை ஒடுக்கவே…!(Video)
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிந்தைய காலத்தில் புலி நீக்க அரசியல் போருக்கு ஈழத் தமிழ் சமூகம் முகம் கொடுத்து வருகிறது.கடந்த காலத்தில் புலிகளை அழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு, ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது அரசு.
அதேபோல முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய காலத்தில் புலிகளை பற்றி நினைவுகளை ஒடுக்கும் நீக்கும் போர் என்ற பெயரில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதுடன் விடுதலைப் போராட்டம் சார்ந்த தடயங்களை அழிப்பதும் புலிகள் என்ற விம்பம் தமிழர்களின் அடையாளமாய் இருப்பதை துடைத்தழிப்பதுமான முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் இடம்பெற்று வருகின்றது.
அதில் ஒரு பகுதியாய் யாழ். பல்கலைக்கழகத்திலும் புலி நீக்க அரசியல் முயற்சி ஒன்று இடம்பெற்ற போதும் பல்கலைக்கழக மாணவர்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த பெண் தமிழ் சட்டத்தரணி ஒருவர் புலிகள் பாசிசவாதிகள் என்று கொழும்பில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியிருந்தமை சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பை உள்ளாகியிருந்தது. இது தொடர்பில் மேலும் ஆராய்கிறது இன்றைய பதிவுகள் நிகழ்ச்சி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 22 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
