தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பரிதாப நிலை - விகாரைகள், ஆலயங்களில் தஞ்சம்
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் உட்பட 50இற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அண்மைக்காலமாக விகாரைகள் மற்றும் ஆலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து ஆசி பெற்று வருகின்றனர்.
பிரார்த்தனை செய்தவர்களில் பெரும்பாலானோர் பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்து சேகரித்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் ஆகும்.
அரசியல்வாதிகள்
சமீபத்திய நாட்களில் 20இற்கும் மேற்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் கதிர்காம கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள உயர் அரச அதிகாரி ஒருவர், சிறப்பு பாதுகாப்புடன் அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மஹா போதி விகாரைக்குச்சென்று தேரர்கள் பலரை சந்தித்து ஆசி பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழல்கள் மற்றும் முறைகேடுகள்
இதேபோல், இந்தியாவுக்கு சென்ற முன்னாள் அரசியல்வாதி ஒருவர் அங்குள்ள கோவிலில் மிகப்பெரிய அளவிலான பிரார்த்தனை நடத்தி ஆசி பெற்றுள்ளார்.
பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட சுமார் 20 அரச அதிகாரிகள் சமீபத்திய நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 19 மணி நேரம் முன்

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri
