அரசியல்வாதிகள் பலவந்தமாக காணிகளை பிடித்துக் கொள்வதாக குற்றச்சாட்டு
அரசியல்வாதிகள் பலவந்தமான அடிப்படையில் காணிகளை பிடித்துக் கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உணவு நெருக்கடி நிலைக்கு தீர்வாக பயிர்ச் செய்கையில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்து இவ்வாறு அரசாங்க காணிகளை, அரசியல்வாதிகளும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் கைப்பற்றிக் கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முறைப்பாடு

இந்த விடயம் தொடர்பில் தேசிய கால்நடை வளச் சபை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
காணி அபகரிப்பு

குளியாப்பிட்டி பகுதியில் சபைக்கு சொந்தமான சுமார் 20 ஏக்கர் காணியை அரசியல்வாதி ஒருவரும் அவருக்கு நெருக்கமானவர்களும் கைப்பற்றிக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான இந்தக் காணி கால்நடை வளச் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
பயிர்ச் செய்கையில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்து இவ்வாறு அரசாங்க காணிகள் அபகரிக்கப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
| நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் |
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri