நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - விமல் திட்டவட்டம்
மௌனமும் ஒரு குரல் என்று கூறப்படும் நிலையில், தமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இரட்டை குடிமக்களை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிப்பதில்லை என்ற தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை தொடர்பான விவகாரத்தில் தங்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியதாகவும், அவர்களின் நிலைப்பாடு மாறாமல் இருப்பதாகவும் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் பசில் ராஜபக்ச அல்லது வேறு எவரும் நாடாளுமன்றத்தில் நுழைவதற்குத் தாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு கேள்விக்குப் பதிலளித்த வீரவன்ச, பொருளாதார சவால்களை பசில் ராஜபக்ச வென்றால் அது முக்கியமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
அவர் பொருளாதார சவால்களைச் சமாளிக்க முடியுமா என்று தெரியாது. அவரால் அவ்வாறு செய்ய முடிந்தால், அது இன்றியமையாததாக அமையும் என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.