மாகாணசபைகள் அழிந்துபோய் இருப்பதற்கு கூட்டமைப்பே காரணம்! பிள்ளையான்

Election Sumanthiran Sivanesathurai Santhirakanthan Tamil Nation Alliance
By Kumar Oct 11, 2021 09:14 PM GMT
Report

மாகாணசபைகள் இன்று மூன்றரை வருடங்களாக அழிந்துபோய் இருப்பதற்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சராகவிருந்த சி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக வரக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட செயற்பாடே இதுவரையில் மாகாணசபை தேர்தல் நடைபெறாததற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்னும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிக்குக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் வீடமைப்பு திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல்கட்ட நிதி வழங்கும் நடவடிக்கை இன்று நடைபெற்றுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட 33பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதி இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எனது முதலாவது நாடாளுமன்ற உரையின்போது அதிகார பகிர்வு விடயத்தில் மாகாணசபை முறைமை மட்டுமே எமது கைகளில் உள்ளது. அதனை பலப்படுத்தியெடுக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.

2017ஆம் ஆண்டு மாகாணசபை முறைமையில் வந்த சட்டத்தைச் சரியாக நடத்தி முடித்திருந்தால் நல்லாட்சி அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இழைத்த தவறுதான் மாகாணசபை தேர்தல் தாமதமடைந்ததற்குக் காரணமாகும்.

ஐம்பதிற்கு ஐம்பது, வட்டாரமுறை என்றெல்லாம் கொண்டுவந்து குழப்பியடித்து எல்லாவற்றையும் குழப்பவிட்டனர். வடக்கில் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது மீண்டும் அவர் போட்டியிட்டு முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற பயத்தில் சுமந்திரன் மாகாணசபைத் தேர்தலைத் தடுத்திருந்தார்.

சட்டமூலம் வந்தபோதுகூட தமிழில் அதனைச் சமர்ப்பிக்கவில்லை என்று கூறியவர் சுமந்திரன் அவர்களாவார். ஆகக்கூடுதலாக ஆங்கில மொழியைப் பயன்படுத்துபவரும் சுமந்திரன் தான்.

ஆகையால் அவரது உள்ளக அரசியல் காரணமாக அவர் முடிவெடுக்கக்கூடிய ஆட்சியில் இருந்தபோதுகூட மாகாணசபை முறைமை மூன்று வருடங்களாக அழிந்துபோய் கிடப்பதற்குப் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.

ஆனால் தற்போதிருக்கின்ற அரசாங்கம் வந்ததிலிருந்து தேர்தலை நடத்தவேண்டுமென்ற முன்மொழிவை வைத்துக் கொண்டேயிருந்தது. அது சாத்தியமாகக்கூடிய சூழல் உருவாகியிருக்கின்றது.

அடுத்த வருடம் மூன்றாம் மாதமளவில் தேர்தல் அறிவிப்பை அரசாங்கம் செய்திருக்கின்றது. கிழக்கு மாகாணம் தனித்துவமான மாகாணமாகும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தங்கள் தலைமையைத் தீர்மானிக்கின்ற தேர்தலாக அதை நாங்கள் பார்க்க வேண்டும். அந்தத் தேர்தலில் நல்லதொரு முதலமைச்சரை மக்கள் தேர்வு செய்து இந்த மாகாணத்தைக் கட்டியெழுப்ப அவருடன் இணைந்து உழைக்க வேண்டும்.

அதிகார விடயத்திலும் மாகாணசபை முறைமையிலிருந்து தான் ஆரம்பிக்க முடியுமென்று நாங்கள் 2007ஆம் ஆண்டிலிருந்தே சொல்லி வந்திருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கள் கொள்கையின் பிரகாரமும் அவர்களின் பிழைகளை ஏற்றுக்கொண்டும் யதார்த்தத்தை உணர்ந்து மாகாணசபை முறைமையில் இறங்கியிருப்பதும் நேற்று அவர்கள் மாகாணசபை தேர்தலுக்கான போட்டியாளர்களைப் பேசி தீர்மானித்திருக்கின்ற செய்திகளை அறிந்து நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

2008ஆம் ஆண்டு தேர்தலில் எங்களால் போட்டியிட முடியாது எனவும் வடக்கு கிழக்கு இணையாத மாகாணத்தில் போட்டியிட முடியாதென்று பேசியவர்கள் இன்று தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே போட்டியாளர்களைத் தெரிவு செய்து களத்தில் குதித்திருக்கின்ற நிலைமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

எதிர்காலத்தில் சிறந்த ஒரு முதலமைச்சரை வடக்கு கிழக்கு பெற்றுச் சிறப்பான அதிகாரத்தை நோக்கிய கிழக்கு மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் பங்கெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US