ஐ. மக்கள் சக்தியை பிளவுபடுத்த முயற்சிக்கும் வர்த்தகர் - எஸ்.எம். மரிக்கார்
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவை ஏற்படுத்தி கட்சியைச் சீர்குலைக்கும் முயற்சியில் வர்த்தகர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் தனது பத்திரிகையைப் பயன்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இல்லாத பிரச்சினையை ஏற்படுத்த முயன்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்(S. M. Marikkar) தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நாகலோக நாகம் மற்றும் கோவிட் பாணி மருந்து ஆகியவற்றை பிரசாரப்படுத்தி மக்களை ஏமாற்ற முயற்சித்ததும், இந்த வர்த்தகருக்கு சொந்தமான ஊடக நிறுவனம் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியைக் கைவிட்டு, சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் பயணத்தை ஆரம்பத்தது மீண்டும் மறுபக்கம் திரும்பிச் செல்ல அல்ல. ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கியத்தைச் சீர்குலைக்க மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, பல்வேறு மாபியாக்காரர்களின் பத்திரிகைகளுக்கோ முடியாது.
இப்படியான கீழ்த்தரமான ஊடகங்களின் பொய் பிரசாரங்களுக்குப் பதிலளிப்பதை விட ஐக்கிய மக்கள் சக்தி, மக்களுக்காக புதிய வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் எஸ்.எம். மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri