ரிஷாத்திற்கு சிறையில் போத்தலிலேயே சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை - லக்க்ஷ்மன் கிரியெல்ல
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சிறை அறை மாலை 5 மணிக்கு மூடப்படுவதால் இரவு நேரங்களில் போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கையில், கட்சி பேதங்களுக்கு அப்பால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய சிறப்புரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகராகிய உங்களுக்கு உள்ளது. தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் சிறை அறை மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது.
இதனால் இரவு நிறத்தில் போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கத்தின் பிரகாரம் இரவு வேளையில் இரண்டு தடவைகள் மத வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகளிலிருந்து உணவு கொண்டுவரப்படுகிறது.
மேலும் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி றிசாத்தின் மைத்துனரைக் கைது செய்து சிறையில் பல வாரங்கள் அடைத்து வைத்தார்கள்.
ஆனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்ணுக்கு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri